தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் மாநிலபொதுக்குழு கூட்டம், மதுரை வில்லிபுரம் ரய்யான் கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் முகமது பஷீர் தலைமை தாங்கினார் மற்றும் முகம்மது பெய்க், லியாகத் அலி காஜா மொய்தீன் இனாயத் துல்லா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய ஜமாஅத் மாநில பொதுக்குழுவின் சார்பில் ஆரிப் சுல்தான் தீர்மானங்களை வாசித்தார். தமிழகத்தில் மத நல்லிணக்கம் சகோதரத்துவத்தை சிதைக்கும் செயலில் ஈடுபடுவது மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வழிபாட்டுத்தலங்களுக்கும் மின்சார கணக்கீடு குறைந்தபட்சமாக ஒரே அளவில் இருக்க வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடை 3.5% லிருந்து 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
வக்ஃபு திருத்த சட்டம் கொண்டு வருவதை தடுத்து நிறுத்தி தமிழக மஸ்ஜிதுகளின் ஜமாஅத் கூட்டமைப்பின் மூலம் போராட்டம் நடத்துவது. வக்ஃபு சொத்துகளில் கல்வி நிலையங்கள் 30 ஆண்டு கால குத்தகை கொடுக்கும் அதிகாரத்தை மாநில அரசு வாரியத்திற்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்வில், தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.