உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தென்னிந்தியா அணி சார்பாக தமிழகத்திலிருந்து ஆறு வீரர்கள் மற்றும் அணி மேலாளர் கலந்து கொண்டுள்ளனர்.
போட்டியில் பங்கேற்ற பின்னர் இன்று (20. 2. 2025) நள்ளிரவு ஒரு மணி அளவில் ரயில் கங்கா காவேரி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் மாற்றுத்திறனாளிகள் வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடனும் இந்த ரயிலில் ஏற முடியாத நிலையில் வாரணாசியில் ரயில்வே நிலையத்திலயே அமர்ந்துள்ளனர்.
எந்த ரயில்களும் கிடைக்காத நிலையில் மாற்றுத்திறனாளி வீரர்கள் மற்றும் அணி மேலாளர் உள்ளிட்டோர் தமிழகம் திரும்ப தமிழக அரசு உதவி செய்யுமாறு அணியின் கேப்டன் சச்சின் சிவா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகா கும்பமேளா காரணமாக உத்திரபிரதேசத்தில் அதிகளவிற்கான பக்தர்கள் வருகையால் ரயில் நிலையத்தில் இருந்து எங்கும் செல்ல முடியாமல் தவித்துவரும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியினர்.