மதுரை: ஜாக்டோஜியோ அமைப்பினர் ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
திமுக அரசின் தேர்தல்கால வாக்குறுதியான புதிய பென்சன் திட்டம் ரத்து செய்து சத்துணவு ஊழியர்கள், எம். ஆர். பி. செவிலியர், அங்கன்வாடி ஊழியர்கள், , உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம், நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 41 மாத கால பணிநீக்க காலத்தை வரன்முறை படுத்த வேண்டும், தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு வழங்க வேண்டும் மற்றும் ஜாக்டோ-ஜியோ மாநில மாநாட்டில் முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் வருவாய்த்துறையினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராகவும், திமுக அரசின் வாக்குறுதியை நிறைவேற்றகோரியும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தரையில் அமர்ந்தவாறு பெண் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் நடத்திய போராட்டத்தில் பேசிய ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் புதிய பென்ஷன் திட்டம் ரத்து தொடர்பாக தமிழக அரசு அறிவித்துள்ள குழு என தெரிவித்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி