மதுரை: லோடு ஆட்டோ, வேன் தொழிலாளர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

85பார்த்தது
தென்மாவட்டங்களின் வியாபார பகுதிகளான மதுரை மாநகர் கீழமாசி வீதி, வெங்கலக்கடைத் தெரு, அம்மன் சன்னதி, எழுகடல் தெரு, கீழமாரட் வீதி போன்ற பகுதிகளில் இருந்து உணவுப்பொருள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களும் மொத்த விற்பனை செய்யப்பட்டு மற்ற மாவட்டங்களுக்கு லாரி, வேன், ஆட்டோக்கள் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை, சிறிய ரக வாகனமான டாடா ஏசி, அபே ஆட்டோ போன்ற இலகு ரக வாகனங்கள், கீழமாசி வீதியில் பொருட்களை ஏற்ற-இறக்க பகல் 1 மணி முதல் 3.30 மணி வரை தான் அனுமதி என, நேரம் நிர்ணயித்துள்ளதால், மதுரையைச் சுற்றி உள்ள சுமார் 20 கிலோமீட்டர் வரை செல்ல, சரக்கு ஏற்ற - இறக்க நேரம் 3 மணி நேரம் ஆகிறது. 

ஒரு முறை சரக்கு ஏற்றி செல்ல கிடைக்கும் வாடகை, பெட்ரோல் செலவிற்குக் கூட பற்றாக்குறையாக உள்ளது. மேலும் வீட்டு உணவு மற்றும் வாகன கடன் கட்ட முடியாமல் மிகவும் சிரமத்தில் இதை நம்பி வாழ்கின்ற 150 குடும்பங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் சரக்கு ஏற்ற-இறக்க சிறிய ரக வாகனங்களுக்கு அனுமதிக்க அளிக்க வேண்டும் என கூறி மதுரை மாவட்ட சுமைப்பணி, வேன், ஆட்டோ மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி