திமுக மதுரை வடக்கு மாவட்டம் மதுரை மேற்கு தொகுதி விளாங்குடி கலைஞர் திடலில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், உரையாற்றிய தகவல் தொழில் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,
ஒரு கட்சியை நடத்துவதற்கு அடிப்படை திராவிட இயக்க தத்துவத்தின் இன்றைக்கு செயல்பாடாக இருக்கும். கொள்கை அடிப்படையில் எந்த நிதி ஒதுக்கி சட்டம் உருவாக்கி சமுதாயத்தின் மாற்றத்தை கொண்டுவர முடியாது.
அந்த அடிப்படையில் பார்த்தால் இறுதியில் சுமார் 20 ஆண்டுகள் வரலாற்றில் மதுரை மாவட்டத்தில் திமுக அந்த அளவுக்கு பெரிய வெற்றி பெற்றதில்லை இருக்கிற 10 தொகுதியில் குறிப்பாக 2016 தேர்தலில் 10 தொகுதிகளில் வெறும் இரண்டு தொகுதிகள் தான் வெற்றி பெற்றோம்.
2021 தேர்தலில் பத்தில் ஐந்து தொகுதிகள் வெற்றி பெற்றோம். மாநில சராசரி பார்த்தால் இது குறைவாக தான் இருக்கிறது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தும்போது பல தொகுதிகளில் நூறு சதவீதம் வெற்றி பெற்ற சூழ்நிலையில் மேற்கு தொகுதியில் சுமார் 28 30 சதவீதம் மாமன்ற உறுப்பினர் பொறுப்புகளில் வெற்றி பெறவில்லை எனவே இந்த கூட்டம் சிறப்பாக அமைந்திருக்கு நல்ல ஆரம்பம் என்று நான் கூறினாலும் மூன்று முறை தொடர்ந்து இந்த தொகுதியில் மாற்று கட்சி வெற்றி பெற்ற சூழ்நிலையில் நமக்கெல்லாம் உழைப்புக்கு இது ஒரு ஆரம்பமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன் என்றார்.