ஊத்தங்கரை - Uthangarai

ஊராட்சி செயலர்கள் அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

கிருஷ்ணகிரி தாயால் நிலையம் முன்பு இனுறு ஊராட்சி செயலர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கக் கோரி ஊராட்சி செயலர்கள் சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. முதல் கட்ட போராட்டம்: ஆகஸ்ட் 21, 2024 அன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாவட்ட அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இரண்டாம் கட்ட போராட்டம்: செப்டம்பர் 18, 2024 அன்று ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து மாநில முதலவர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், கூடுதல் தலைமைச் செயலர், இயக்குநர் ஆகியோருக்கு மாநிலம் முழுவதும் இருந்து 40, 000 கடிதங்கள் அனுப்பும் போராட்டம் அனைத்து மாவட்ட தலைமை தபால் நிலையங்களில் தொடங்கப்பட்டது. மூன்றாம் கட்ட போராட்டம். செப்டம்பர் 27, 2024 அன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து சென்னை பனகல் மாளிகை முன்பு பெருந்திரள் முறையீட்டு இயக்கம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை: ஊராட்சி செயலர்கள் அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி