திப்பனூர் ஏரி மதகு உடைப்பட்டதால், விவசாயிகள் அவதி.

63பார்த்தது
திப்பனூர் ஏரி மதகு உடைப்பட்டதால், தண்ணீரை சேமிக்க முடியவில்லை - புதிய மதகு அமைத்துக்கொடுக்க விவசாயிகள் கோரிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட திப்பனூர் ஏரி சுமார் 59 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வருடந்தோரும் பாரூர் ஏரியிலிருந்து காலவாய் மூலம் நீர் கிடைகப்பெறுவதால், ஏரி நிரம்பி சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த ஏரி நிரம்பினால் மதகு வழியாக பெனுகொண்டாபுரம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஏரியின் மதகு உடைந்துள்ளது. தற்போது பெனுகொண்டாபுரம் ஏரிக்கு தண்ணீர் சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், பாரூர் ஏரியிலிருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டால், திப்பனூர் ஏரியில் உள்ள தண்ணீரை சேமிக்க முடியாமல் போய்விடும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். உடைப்பட்ட மதகை மாற்றியமைத்து புதிய மதகு அமைத்துக்கொடுக்க கோரிக்கை வைக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி