கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி இன்று(செப்.17) நடந்தது.
பிரதமரின் 74 வது பிறந்தநாளையொட்டி 74 புடவைகள் கொடுத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்தவிழாவில் மண்டல உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் சிவா, முன்னால் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னால் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் மாதவன், மண்டல் பார்வையாளர் தனக்கோடி, மண்டல் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் தாமோதரன், சங்கர், மகேந்திரன், சென்னகிருஷ்ணன், பாவக்கல் பிரபாகரன், தமிழ்செல்வன், வக்கீல் தண்டபாணி, ஜெயக்குமார், மகளிர் அணி ஆனந்த ஜோதி, ஆட்டோ ஆறுமுகம், கோவிந்தராஜ், ராமமூர்த்தி கிளை தலைவர் பாரதிபுரம் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை முன்னால் மாவட்ட செயலாளர் பி. வி வரதன் செய்திருந்தார்.