பூசாரி கொட்டாய் கிராமத்தில் பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா. அதிமுக எம்எல்ஏ தமிழ்செல்வம் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூர் ஊராட்சி, பூசாரி கொட்டாய் கிராமத்தில் பல்நோக்கு கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. பூசாரி கொட்டாய் கிராமத்தில் பல்நோக்கு கட்டடம் கட்டுமாறு அப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் ஊத்தங்கரை அதிமுக எம். எல். ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஊத்தங்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் டி. எம். தமிழ்ச்செல்வம் தலைமை வகித்து கட்டிடத்தைத் திறந்து வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி ஜெயராமன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் சாகுல் அமீது, ஒன்றிய செயலாளர்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எக்கூர் துணை தலைவர் கார்த்திகேயன், மாரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூமலர் ஜீவானந்தம், முன்னாள் ஒன்றியச் செயலாளர் தேவேந்திரன், அவைத் தலைவர் கிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி விக்னேஷ், கவியரசு, உள்ளிட்ட அதிமுகவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.