கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்துள்ள சக்கில்நத்தம் பகுதியை சேர்ந்தவர் எம்ஜி (55) கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் பல இடங்களில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவிலை. இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அன்று வலி அதிகமாக இருந்ததால், விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் அவரை குடும்பத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, நேற்று முன்தினம் (செப்-16) அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நட்த்தி வருகின்றனர்.