உங்களைத் தேடி உங்கள் ஊரில்; கள ஆய்வு செய்த கலெக்டர்

75பார்த்தது
உங்களைத் தேடி உங்கள் ஊரில்; கள ஆய்வு செய்த கலெக்டர்
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி ஊராட்சி ஒன்றியம், கோட்டையூர் ஊராட்சியில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு இன்று (செப்.18) கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது இருளர் இன மக்களுக்கு பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ், ரூ. 1 கோடியே 37 இலட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் 24 வீடுகள் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் கட்டுமான பணிகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

அதே போல் முனியன் அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள ராஜா மனைவி மாரம்மா அவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடு கட்டுமான பணிகளை ஆட்சியர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி