திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

75பார்த்தது
கிருஷ்ணகிரியில் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் சென்னை தேசிய சாலையில் அமைந்துள்ள தேவராஜ் திருமண மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். அப்போது வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபடவேண்டும் என கூறினார். முன்னதாக மாவட்ட செயலாளர் மதியழகன் பேசும் போது கழக தலைவர் வழியில் நான் மாவட்ட செயலாளராக வந்த பிறகு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல், அணி அமைப்பாளர்கள் அதிகளவில் உருவாக்குதல், கழக நிர்வாகிகளின் குறைகளை உடனே நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட ஏராளமான கழக வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறேன் என கூறினார்.

தொடர்புடைய செய்தி