பர்கூர் - Bargur

போச்சம்பள்ளி பகுதிகளில் கனமழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி

அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேலும் சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான வடமலம்பட்டி, குள்ளனூர், மோட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று(அக்.13) பிற்பகல் 3 மணிமுதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் சீதோஷ்ண நிலை மாறி குளிர்ச்சி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வீடியோஸ்


கிருஷ்ணகிரி