இன்று(அக்.5) புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலில் மூலவர் சென்னகேசவ பெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குடுமேனஹள்ளி, பாரூர், விளங்கமுடி உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.