அமாவாசை முன்னிட்டு மஞ்சமேடு ஆற்றில் புனித நீராடிய மக்கள்.

62பார்த்தது
மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு நினைவாக தர்ப்பணம் கொடுத்தனர்.

முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர்.

இதில் அரசம்பட்டி, பாரூர், புலியூர், போச்சம்பள்ளி மற்றும் வெளி மாவட்ங்களை சேர்ந்தத ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி வழிபட்டனர்.

ஆண்டுக்கு ஒருமுறை இறந்துபோன பெற்றோருக்குத் திதி கொடுப்பது அவசியம். ஆனால் பெற்றோர் இறந்த நாள், திதி அறியாதவர்கள் மகாளய அமாவாசை நாளில் கொடுக்கலாம்.

அதனால்தான் மறந்து போனவனுக்கு மகாளயம் என்கிறார்கள் முன்னோர்கள். மகாளய அமாவாசை நாளில் செய்யும் முன்னோர் வழிபாடு 21 தலைமுறை பித்ருக்களுக்கு வழிகாட்டும். அவர்கள் நற்கதி அடைவார்கள் என்கிறது சாஸ்திரம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி