மாங்கனி கண்காட்சிக்கு 30 கி. மீ. நடந்து சென்ற இசைக் கலைஞா்.

79பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள மகாதேவகொல்லஹள்ளி பகுதியை சோ்ந்தவா் அசோக்குமாா் (33) பம்பைக் கலைஞரான இவா் கலைமாமணி விருது மற்றும் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடா்ந்து இடைவிடாமல் 6 மணி நேரம் பம்பை வாசித்தும் சாதனை புரிந்தவா்.

இவா் கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் 30-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியை சிறப்பிக்கும் வகையில், போச்சம்பள்ளியில் இருந்து பம்பை இசைத்தபடி நடந்தே வர முடிவு செய்தாா்.

இதையொட்டி நேற்று செப்-28ம் தேதி போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அலுவலகத்தில் இருந்து பம்பை வாசிப்புடன், அசோக்குமாா் தனது நடைப்பயணத்தை தொடங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி