போச்சம்பள்ளி பகுதிகளில் தேங்காய் விலை கிடு கிடு விலை உயர்வு.

72பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் அகரம், பேருஹள்ளி, பாரூர், மற்றும் மஞ்சமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 36, 000 ஏக்கரில் 15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.

இங்கு விளையும் தேங்காய்கள் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா, குஜராத், மகாராஷ் டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்ப டுகிறது. கடந்த மாதங்களில் விளைச்சல் அதிகரிப்பால் தேங்காயின் விலை கடுமையாக சரிந்தது.

ஒரு டன் 28 ஆயிரம் ரூபாயாக விலை குறைந்தது இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கத்தால் தேங்காய் வரத்து குறைந்துள்ளது இதனால் தேங்காயின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

ஒரு டன் 38 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது அத்துடன் விஜயதசமி சரஸ்வதி பூஜை தீபாவளி என்று பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தென்னை விவசாயம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி