கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேலம்பட்டி, பாலே குளி, அகரம், அரசம்பட்டி, பாரூர், மஞ்சமேடு, தாதம்பட்டி, கீழ்குப்பம் பகுதிகளில். ஆயிரக்க ணக்கான ஏக்கர் முதல் போக நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த நிலையில்,
கடந்த 2 ஆண்டுகாளக தொடர் மழை பெய்ததால் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியது. இந்த நீரை பயன்படுத்தி முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அயடைந்த விவசாயிகள் நெல் சாகு படி செய்து வருகின்றனர். நடவு செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்ட போது. தேவையான அளவு மழை பெய்ததால் பயிர்கள் செழித்து வளர்ந்தது.
தற்போது, நெற்பயிரில் கதிர்கள் விட்டு முற் றத்தொடங்கி, பச்சை பசேல் என காணப்படு கிறது. மழையால் நெல் விளைச்சல் அமோகமாக காணப்படுகிறது. கதர்கள் முற்றியதும் நெல் அறு வடை பணிகள், கார்த் திகை மாத இறுதியில் தொடங்கும் என விவசா யிகள் தெரிவித்தனர்.