

கிருஷ்ணகிரி: குண்டும் குழியுமாக உள்ள சாலை; வாகன ஓட்டிகள் அவதி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பானூர், துறையூர் உள்ளிட்ட கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் இந்த பகுதியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது தார் சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் பேரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எதுவும் இல்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.