கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போச்சம்பள்ளி எம். ஜி. ஆர். நகரில் அரசு அனுமதியின்றி வெடிபொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்தது அதன் பேரில் போச்சம்பள்ளி போலீசார் அங்குள்ள வீட்டில் நேற்று முன்தினம் செப்-29ம் தேதி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விற்பனைக்கு வைத்திருந்த சோட்டி(50) மற்றும் நசீமாவுடன் ஆகிய இரண்டு பேர் ரகசியமாக பட்டாசுகள் தயாரித்து விற்றது தெரியவந்தது. இதையெடுத்து போலீசார் ஒரு லட்சம் மதிப்பிலான வெடி பொருட்களை பறிமுதல் செய்ததுடன் சோட்டி மற்றும நசீமாவை கைது செய்தனர்.