உத்தரகாண்ட்: லச்சிவாலா சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார் மீது மணல் லாரி மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டேராடூனில் இருந்து டோய்வாலா நோக்கி வந்து கொண்டிருந்த மணல் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த 3 கார்களை மோதி நசுக்கியது. இதில், பங்கஜ் குமார் மற்றும் ரத்தன்மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.