வழக்கமாக ஒரு விஷயத்தில் முதல் முயற்சி தவறாகவே முடியும் என்பதால், கடவுள் முதலில் ஆண்களை தான் படைத்திருப்பார் என சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா? என்ற கேள்விக்கு அவர் இப்பதிலை கூறியுள்ளார். மேலும் 2வது முறை, கடவுள் பெண்களைப் படைத்து, அவர்களுக்குத் தேவையான திறனை கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது ஆண்கள் தவறான ஒரு படைப்பு என்பதை மறைமுகமாக கூறியுள்ளார்.