
நாடு முழுவதும் 5 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து
போலி ரேஷன் அட்டைகளை ரத்து செய்ய மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், நாடு முழுவதும் 2023 நிதியாண்டு முதல் இந்த நிதியாண்டு வரை 5 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் மத்திய அரசால் ரூ.1.86 லட்சம் கோடி சேமிக்க முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், 4 கோடி போலி எல்பிஜி இணைப்புகளை கண்டுபிடித்து ரத்து செய்ததால், ரூ.73,443 கோடி மிச்சமாகி இருப்பதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.