
IND vs BAN: இந்தியா அணி மற்றும் வங்கதேச அணி நாளை மோதுகிறது
2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இன்று (பிப்.19) முதல் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானில் நடத்தப்படாமல் துபாயில் நடத்தப்படுகிறது. நாளை குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டம் துபாயில், இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும். இரண்டு அணிகளுக்கு நேருக்கு நேர் மோதிய கடைசி 5 ஆட்டங்களில் 3இல் வங்கதேசமும், 2இல் இந்தியாவும் வென்றுள்ளன.