கோவை விமான நிலையம் வந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், ஆர்.பி.உதயகுமார் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, அவர் குறித்தெல்லாம் பேச நான் விரும்பவில்லை என கூறினார். பின்னர், செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு, அண்ணன் செங்கோட்டையன், MGR கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே இருக்கக்கூடியவர். நானும் அவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அந்த வகையில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைக்கும் உன்னத தொண்டராகதான் இருக்கிறார் என கூறியுள்ளார். நன்றி: PT