கரூர்: பேராள குந்தாளம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

68பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் பேராள குந்தாளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ஆம் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பூச்செரிதல் விழா நடைபெற்றது. இன்று குளித்தலை அம்மன் குரூப்ஸ் மற்றும் இளைஞர் அணி நடத்தும் 41ஆம் ஆண்டு பால்குடம் விழாவை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் கடம்பன் துறை காவிரி ஆற்றிலிருந்து மேளதாளத்துடன் முக்கிய வீதி வழியாக பால்குடம் எடுத்து வந்தனர். 

பிறகு கோவிலை சுற்றி வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை புதன்கிழமை சுவாமி திருவீதி உலா, இளநீர் பூஜை, கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 20ஆம் தேதி வியாழக்கிழமை கிராம பூஜை, 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாவிளக்கு பூஜை நடைபெற்று, 22ஆம் தேதி சனிக்கிழமை வான வேடிக்கையுடன் அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி