கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மகளிர் மேனிநிலைப் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வினா விடை புத்தகம் வழங்கினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அனிதா, கலியமூர்த்தி, நகர்மன்ற தலைவர் சகுந்தலா, நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.