மதிமுக நிர்வாகி திருமண விழாவில் எம். பி பங்கேற்பு

63பார்த்தது
மதிமுக நிர்வாகி திருமண விழாவில் எம். பி பங்கேற்பு
கரூர் மாவட்டம், மாநில மாணவரணி துணைச் செயலாளர் குளித்தலை பூமிநாதன் - சண்முகப்பிரியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி குளித்தலை பெரிய பாலம் தனியார் மண்டபத்தில் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் இன்று நடைபெற்றது. குளித்தலை நகர செயலாளர் சிவேஷ் வர்ஷன் அனைவரையும் வரவேற்றார். மாநில மாணவர் அணி செயலாளர் பால சசிகுமார் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் திருச்சி எம். பி துரை வைகோ கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

இந்நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, மாவட்ட செயலாளர்கள் வட சென்னை கிழக்கு ஜீவன், திருச்சி புறநகர் தெற்கு மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி புறநகர் வடக்கு சேரன், தருமபுரி ராமதாஸ், நாமக்கல் கிழக்கு சேகர், அரியலூர் இராமநாதன், தஞ்சாவூர் தெற்கு தமிழ்ச்செல்வன், திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் பல்லவி ராஜா, குளித்தலை நகர மக்கள் இயக்கத் தலைவர் சீத்தாராமன், கரூர் மாவட்ட நிர்வாகிகள் அவைத்தலைவர் ஆண்டிப்பட்டி ராமசாமி, மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணை செயலாளர்கள் சண்முகம், வினோதினி தங்கவேல், ஆசிரியர் வடிவேல், மாநில மகளிர் அணி துணை செயலாளர் பாப்பாத்தி குமரேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி