'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சந்தோஷ் பிரதாப். அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சந்தோஷ் பிரதாப்பின் தாயார் இந்திரா பாய் உடல்நலக்குறைவு காரணமாக, நேற்று மாலை 7:40 மணிக்கு மருத்துவமனையில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது இறுதிச் சடங்குகள் இன்று (பிப்.19) வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.