கரூர்: கடும் பணியால் ரயில் நிலையத்தில் பயணிகள் அச்சம்

61பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை நகரப் பகுதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களான மேட்டு மருதூர், தண்ணீர் பள்ளி, மணத்தட்டை, நச்சலூர், நங்கவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாகவே கடும் பனி நிலவி வருகிறது. 

இதனால் அதிகாலை செல்லும் கூலி தொழிலாளிகள், விவசாய தொழிலாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். குளித்தலை ரயில் நிலையத்தில் கடும் பனி பொழிவால் ரயில்கள் வருவது கூட தெரியாத நிலை ஏற்பட்டது. தண்டவாளத்தை கடந்து செல்லும் ரயில் பயணிகள் சற்று அச்சத்துடன் கடக்கும் சூழல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி