கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப். இவர், தனது பக்கத்து வீட்டுக்காரர் அனில் குமாரின் சேவல் அதிகாலை 3 மணியளவில் கூவத் தொடங்கியதால், தூக்கமின்மை ஏற்படுவதாக RDO அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்த பிறகு, வீட்டின் மேல் தளத்தில் இருந்த சேவல் கொட்டகையை அகற்றி, வீட்டின் தெற்குப் பக்கத்திற்கு மாற்றுமாறு RDO அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இதற்காக, அனில் குமாருக்கு 14 நாட்கள் கெடு விதித்துள்ளார்.