அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியதாவது, “இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் பணம் (ரூ.182 கோடி) தர வேண்டும்?, அவர்களிடம் நிறைய பணம் உள்ளது. உலகத்திலேயே அதிக வரி விதிக்கும் நாடான இந்தியாவில், இறக்குமதி வரி அதிகமாக உள்ளது. ஆகையால், அமெரிக்க பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு சேர்க்கவே கடினமாக உள்ளது. இந்தியா மீதும், அந்நாட்டு பிரதமர் மோடி மீதும் எனக்கு மரியாதை உள்ளது. ஆனால், இந்தியாவில் வாக்கு விழுக்காட்டை அதிகரிக்க அமெரிக்கா எதற்காக பணம் கொடுக்க வேண்டும்?” என கேட்டுள்ளார்.