தென்கரை பாசன விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

85பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தில் தென்கரை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தென்கரை பாசன வாய்க்கால் சங்கத் தலைவர் சேட்டு தலைமையில் இன்று நடைபெற்றது. சங்க செயலாளர் மருதூர் சம்பத், துணைச் செயலாளர் கண்ணதாசன், சங்க பொருளாளர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தென்கரை மற்றும் கட்டளை மேட்டு வாய்க்காலில் பயன்பெறும் சுமார் 27 ஆயிரம் ஏக்கரில் விளைவித்த நெல் வாழை விளைநிலங்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட கோரியும், சிவகங்கை கூட்டு குடிநீர் திட்டத்தில் குளித்தலை பகுதி விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்த வேண்டும், மருதூர் உமையாள்புரம் காவிரி தடுப்பணை கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் வரும் செவ்வாய்க்கிழமை ஆற்றுப் பாதுகாப்பு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளை சந்தித்து முறையிட விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி