கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெரியபாலத்தில் உள்ள நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு உட்கோட்டம் அலுவலகம் முன்பு தென்கரை மற்றும் கட்டளை மேட்டு பாசன வாய்க்கால் விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மே மாதம் வரை பாசனத்திற்கு 10 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி சங்கத் தலைவர் சேட்டு தலைமையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாததால், ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட அதிகாரி கோபிகிருஷ்ணன் மேல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இன்று முதல் மே மாதம் வரை 10 நாட்களுக்கு ஒரு முறை 350 கன அடி தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாசனத்திற்கு தண்ணீர் தேவைக்கு உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு ஏற்பட்டது.