கரூர் மாவட்டம் தோகைமலை பேருந்து நிலையம் எதிர்புறம் கரூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் இணைச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பி. ஜே. பி நிர்வாகிகள் செந்தில், கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பரங்குன்றத்தில் 144 தடை விதித்த தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.