குளித்தலை - Kulithalai

கரூர்: பைக் மோதி பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் படுகாயம்

கரூர்: பைக் மோதி பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் படுகாயம்

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (54). இவர் தனது ஊரைச் சேர்ந்த முருகப் பக்தர்களுடன் பழனி மலைக்கு மாலை அணிந்துகொண்டு பாதயாத்திரையாகச் சென்றுள்ளனர். கடந்த 1 ஆம் தேதி தோகைமலை அருகே வத்தப்பிள்ளையூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியே அதிவேகமாக ஜெகதீசன் என்பவர் ஓட்டிவந்த யமஹா பைக் மோதியதில் ராஜேஷ், அசோக், முருகேசன் ஆகிய 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ராஜேஷ் புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా