கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை பகுதியில் மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் திருவிழாவை முன்னிட்டு கரகம் பாலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து இன்று இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.
பூக்குழி இறங்கும் பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து பின்னர் தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அய்யர்மலை மற்றும் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.