அரளைகல் கடத்தி வந்த வேன் பறிமுதல், வேன் டிரைவர் கைது

69பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுப்புலட்சுமி வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த டாடா 407 வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி அரளைகல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

அதனையடுத்து விஏஓ அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவர் காவல்காரன்பட்டியைச் சேர்ந்த நந்தகுமார் (20) மற்றும் வேன் உரிமையாளர் ராசு (55) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து நந்தகுமாரை கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு யூனிட் அரளை கற்களுடன் வேன் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி