கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரில் தமிழக வெற்றிக் கழகம் நகர இளைஞரணி சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு நகர இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் வாலாந்தூர் காமராஜ் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர் சதாசிவம் ஆகியோர்கள் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் கோமதி, நகரச் செயலாளர் விஜயகுமார் மற்றும் முரளி, மகளிர் அணி பொறுப்பாளர் தமிழ்செல்வி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நகர, கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தர்பூசணி, நீர் மோர், பானக்கம் ஆகியவைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குளித்தலை தமிழக வெற்றிக்கழக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.