

கரூர்: ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாலியாம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகே மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இத்தொட்டியின் அடித்தள தூண்களின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் தெரிந்து ஆபத்தான நிலையில் வலுவிழந்து காணப்படுகிறது. எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்து வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.