கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் கீழ் பகுதியில் நகராட்சி சார்பில் பொது சுகாதார வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டுமான பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள செங்கலில் மிகப்பெரிய அளவு பாம்பு இருப்பதை அறிந்த கட்டுமான தொழிலாளர்கள் முசிறி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் செங்கல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில் சுருண்டு இருந்த சுமார் 6 அடி நீளம் சாரை பாம்பை தீயணைப்பு துறை வீரர்கள் லாவகமாக பிடித்தனர். பிடிப்பட்ட பாம்பை சாக்குபையில் போட்டு தும்பலம் காட்டுபகுதியில் விட கொண்டு சென்றனர்.
இதனால் கடம்பர்கோவில் தெருவில் பாம்பு பிடிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.