கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பரளி கிராமத்தில் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ மலையாளி, ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ மகாகாளியம்மன், ஸ்ரீ மல்லாண்டவர், ஸ்ரீ வழி விடு முருகன் ஆலய கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
முன்னதாக கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று முதல் கால யாக வேள்வி பூஜை நடைபெற்று, இன்று காலை இரண்டாம் கால யாகவேள்வி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை சிவாச்சாரியார்கள் சுமந்து கொண்டு மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் மேல் உள்ள கலசத்திற்கு வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் செய்தனர்
இதில் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு புனித நீர் பெற்று சாமி தரிசனம் செய்தனர்.