கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குமாரமங்கலத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி வழியாக பாசன கால்வாய் நாளடைவில் கழிவு நீர் வடிகாலாக மாறியது. இந்த கழிவு நீர் வடிகாலை சரியாக தூர்வாரப்படாமல் இருந்ததால் நாளடைவில் தற்போது குப்பைகள் தேங்கி கழிவு நீர் செல்லாத வகையில் உள்ளன. கழிவுநீர் தேங்கி நிற்பதால் அங்கு கொசு தொல்லைகளும் அதிகரித்து வந்துள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கொசுவினால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியும், அருகே விளையாடும் குழந்தைகள் கால்வாயில் தவறி விழுந்தும் வருகின்றனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் கழிவுகளை தூர்வார வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.