கரூர் மாவட்டம் குளித்தலை கோட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் சாராத. அமைப்புகள் பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம், மற்றும் உண்ணாவிரதம் போன்றவைகள் நடத்த அனுமதி அளிக்கப்படும் இடங்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி ஸ்ரீ தலைமையில் இன்று நடைபெற்றது. நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட குளித்தலை, தோகைமலை, நங்கவரம், மாயனூர், லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுக்கூட்டம் ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதத்திற்கான இடங்கள் அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை கேட்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் திமுக, அஇஅதிமுக, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமிழ்நாடு காங்கிரஸ், மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், ஆம் ஆத்மி கட்சி, தேமுதிக, எஸ்டிபிஐ , வளரும் தமிழகம் கட்சி, தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் குளித்தலை காவல் ஆய்வாளர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.