குளித்தலையில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு சங்காபிஷேகம்

50பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை பெரியபாலம் பகுதியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு ஆரிய வைசிய மகா சபா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்கிருந்து புனித நீர் எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவில் வந்தனர். பிறகு பக்தர்கள் கொண்டு வந்த புனித நீர் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நிகழ்ச்சி நடத்தினர். அதனை தொடர்ந்து 108 சங்கு அபிஸேகம் நடைபெற்றது. இன்று இரவு பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்று விழா முடிவடைகின்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி