குளித்தலையில் கலாச்சார பண்பாட்டு கலை விழா நிகழ்ச்சி

63பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அறிஞர் அண்ணா மன்றத்தில் கலையாலயா நுண்கலைப் பள்ளி சார்பில் கலாச்சார பண்பாட்டு கலை விழா நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. வாலாந்தூர் ராய ஓம் சாரிடபிள் டிரஸ்ட் வையாபுரி தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் பரதநாட்டியம், பொய்க்கால் குதிரை, காவடி, ஒயிலாட்டம், கரகம், கும்மி கோலாட்டம் உள்ளிட்ட தமிழக நாட்டுப்புற நடனங்கள் கலைக்குழுவினர் ஆடி அசத்தினர்.

குளித்தலை கலையாலய நுண்கலைப் பள்ளி நிறுவனர் மரகதம் வையாபுரி இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்.


நங்கவரம் அரசு பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் செல்வராஜ் தண்ணீர் பள்ளி ஆறுமுகம், திருச்சி தனியார் கல்லூரி தமிழ் துறை தலைவர் மேஜர் மணலி சோமசுந்தரம், திருச்சி கவின் கலைக்குழு நிறுவனர் இளங்கோவன் தொழிலதிபர் அபுபக்கர், அய்யர்மலை தமிழ் துறை தலைவர் ஜெகதீசன், மருதூர் பாஸ்கர், முன்னாள் டிஎஸ்பி ராசன், வழக்கறிஞர் வாசுதேவன் மற்றும் பொதுமக்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி