குளித்தலை - Kulithalai

கரூர்: அய்யர்மலையில் சூரசம்கார விழா

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் ஸ்ரீ ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி யை முன்னிட்டு 7 ஆம் ஆண்டாக அய்யர்மலை திருக்கோவில் மற்றும் சூரசம்ஹார அறக்கட்டளை சார்பில் சூரசம்ஹார விழா விமர்சையாக நடைபெற்றது.  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் அய்யர்மலை மலை கோவிலை 4 கிலோ மீட்டர் சுற்றிவந்து தனது தாய் பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன், சூரபத்மனின் மகன் பானுகோபன் மற்றும் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், சூரபத்மன் மரமாகத் தோன்றியபோது மரத்தை இரண்டாகப் பிளந்து சேவலாகவும், மயிலாகவும் மாற்றி விமோச்சனம் அளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.  அப்போது திரளாக கூடியிருந்த பக்தர்கள் பலரும் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா, வெற்றி வேல் வீரவேல் என்ற கோஷங்கள் முழங்கி சூரசம்ஹார நிகழ்ச்சியினை கண்டனர். இதில் அய்யர்மலை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

வீடியோஸ்


వికారాబాద్ జిల్లా