செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய நெய்குப்பி கிராமத்தில் 6000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தேசிய வேளாண் நிறுவனம் மற்றும் பி என் ஒய் எனும் மென்பொருள் நிறுவனம் இணைந்து கிராமப்புற மேம்பாட்டு திட்டம் மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக நெய்குப்பி கிராமத்தில் 5 வகையான 6000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் 3000 தன்னார்வலர்களுடன் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆர்வமுடன் மரக்கன்றுகளை நடவு செய்தனர், பி என் ஒய் நிறுவனம் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றிய துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன், துணை தலைவர் என் என் கதிரவன் ஒன்றிய கவுன்சிலர்கள் சரஸ்வதி பாபு, நூர்ஜஹான் பாலு ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து முதல் மரக்கன்றை நடவு செய்தனர் கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் மற்றும் சிலம்பாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் காவடியாட்டம் கிராமிய கூத்து கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுடன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.