மின் கம்பத்தில் இருசக்கர வாகன மோதி விபத்து ஒருவர் பலி

68பார்த்தது
இரு சக்கர வாகனத்தில் சீரி பாய்ந்த வாலிபர்கள்: சாலையோர மின் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

திருவள்ளுவர் மாவட்டம் கொட்ட கச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஹரி வயது (20) இவர்
செங்கல்பட்டு மாவட்டம்
சிங்கபெருமாள் கோயில் அருகே செங்குன்றம் பகுதியில்
நண்பர்களுடன் வீடு அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில்
ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் இருந்து அவர் தங்கியுள்ள பகுதிக்கு தனது நண்பனை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது செங்குன்றம் அருகே செல்லும்போது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே ஹரி துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் அவருடன் பயணம் செய்த வினோத் வயது (25) பலத்த தக்காயத்துடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

விபத்து குறித்து
தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஹரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.!!

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி