செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது இங்கு நாள் தொரும் உள்ளூர் மட்டுமல்லாது வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொது மக்களிடையே தூய்மையை வலியுறுத்தும் வகையில்
மாமல்லபுரம் ரோட்டரி சங்கம் சார்பில் தூய்மை மற்றும் பசுமை நிறைந்த மாமல்லபுரத்தை உருவாக்கும் நோக்கில் இன்றைய தினம் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது வெண்ணெய் உருண்டை பாறை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அலை சருக்கில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி கமலிக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் தூய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கியதுடன் தனியார் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியை மாமல்லபுரம் ரோட்டரி சங்க தலைவர் போஸ் தர்மலிங்கம் செங்கல்பட்டு மாவட்ட சார் ஆட்சியர் நாராயண சர்மா மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர் பொதுமக்களிடையே தூய்மையையும் பசுமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பசுமை நிற உடை அணிந்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கடற்கரையை அடைந்து கடற்கரை ஓர பகுதியில் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.